Tuesday, 17 February 2015


உங்களின் மொபைலின் IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க

உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.
இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI-International Mobile Equipment Identity) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்
உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதற்கு cop@vsnl.net  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள் :
  • பெயர்(NAME)
  • முகவரி(ADDRESS)
  • போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
  • அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
  • கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
  • உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
  • எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
  • போனின் அடையாள எண் (IMEI)
ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.
Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின்(Strong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவார்கள்.
அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06# என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்தCostly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும்.

காணாமல் போன CD Driveஐ கணினியில் திரும்ப கொண்டுவருவது எப்படி?

கணினியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது CD/DVD டிரைவ் ஆகும்.  சில நேரங்களில் CD டிரைவில் CDயை போட்டு பார்த்தால் கணினியின் my computerல் CD டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது CD டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணினியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதனை எப்படி சரி செய்வது?
1.  முதலில் Device Managerல் CD டிரைவ் இயல்பு நிலை
யில் இருக்கிறதா என்று பாருங்கள். Devise Manager செல்ல desktopல்  உள்ள my computer ஐகானை வலது கிளிக் செய்து manage மெனுவை கிளிக் செய்யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Devise Manager என்பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணினியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் தெரியும். அதில் CD/DVD Rom devices என்பது enable ஆக உள்ளதா என பார்க்க வேண்டும்.
2.  உங்கள் கணினியின் CPUவில் CD/DVD டிரைவை இணைக்கும் cable சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்.
3.  மேற்கண்டவை சரியாக இருந்தும் கணினியில் CD டிரைவ் தெரியவில்லை என்றால் Registerல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன CD டிரைவை மீட்கலாம்.
Start->Run சென்று regedit என்று type செய்து எண்டர் செய்யவும். இப்போது கணினியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள keyஐ கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் CD/DVD டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
HKEY_LOCAL_MACHINESYSTEMCurrentControlSetControlClass{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}
இந்த keyஐ கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டியலில் UpperFilters, LowerFilters ஆகிய Subkeyகள் இருந்தால் இரண்டையும் அழித்துவிடவும். அழிப்பதற்கு வலது கிளிக் செய்து Delete கொடுக்கவும். ஒரு முறை கணினியை  Restart செய்து விட்டு பார்க்கவும்.

வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க

தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்  ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.
  • நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
  • சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM

SDRAM, DDR, DDR2, DDR3 என்ற வரிசையில் புதிதாக MeRAM (Magneto Electric Random Access memority)  எனும் புது வகை நினைவகம் கடந்த வாரம் நடந்த  2012 IEEE International Electron Devices Meeting in San Francisco வில் அறிமுகம் செய்யப்பட்டது. ““Voltage-Induced Switching of Nanoscale Magnetic Tunnel Junctions” எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் MeRAM பற்றிய தகவல்கள் முதன் முதலில் வெளியிடப்பட்டன.
spin-transfer torque (STT) எனப்படும் மின் காந்த தொழில்நுட்பத்தில் மின்சாரத்தில் உள்ள நகரும் எலெகட்ரான் மூலம் தகவல்களை நினைவாகத்தில் எழுதும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
Electron களில் உள்ள காந்தப் பண்பான “சுழற்சி” (Magetic property of elctrons – referred as spin in addition to their charge)  எனும் வகையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் சில சிக்கல்களை சந்தித்தனர், அதிக தகவல்களை எழுத முற்படும் போது அதிக எண்ணிக்கையில் Electron களை சுழலச் செய்வதால் அதிக மின்சாரமும் அதிக வெப்பமும் ஏற்பட்டது, இதை தவிர்க்க மின்சாரத்தில் உள்ள Voltage ஐ நேரடியாக பயன்படுத்திப் பார்த்தனர். இப்போது வெப்பமும் ஏற்படவில்லை அதே நேரத்தில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களை எழுத முடிந்தது.
இதன் மூலம் மிகக் குறைந்த மின்சாரம்(10 – 1000 மடங்கு குறைவு) , மிக அதிக வேகம், அதிக இடம் (5 மடங்கு) மற்றும் மிகக் குறைந்த விலையில் கணினி நினைவகங்களை உருவாக்க முடியும்.
கணினி மட்டும் அல்லாது செல்போன், TV போன்ற பிற மின்சாதனங்களில் இதை குறைந்த விலையில் பயன்படுத்த இயலும்.

கேப்சர் டெஸ்க்டாப்

உங்கள் டெஸ்க்டாப்பில்(desktop) நீங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக பதிவு(capture) செய்ய வேண்டுமா கீழ்காணும் இலவச சாப்ட்வேர்(free software) உங்களுக்கு உதவும். இதில் நேரடியாக யூடிப்ல்(youtube) அப்லோட் செய்யும் வசதியும் உண்டு.



மேலும் சில,



Google - ன்  சில பயனுள்ள டிப்ஸ் 



01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ  தேர்ந்தெடுக்க 



word +filetype:pdf



எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls  

உதாரணம் : Seven Wonders+filetype:pdf   



02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண



map : <city name>



உதாரணம் : map :chennai 



03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய



time: <Country name>



உதாரணம் : time:china 



04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய



weather :<city name>



உதாரணம் : weather : mumbai 



05. விமானத்தின் விவரம் அறிய



Airline Name <Flight Number>



உதாரணம் : Air India 605

  நாம் பார்க்கும் தளத்தின் (Domain) IP  ADDRESS  அறிய 



01 START கிளிக் செய்து



02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK 

     செய்யவும்.



03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்



04 அதில் tracert websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)

      எடுத்துகாட்டாக : C:\>tracert www.smvptc
.in 

 
[அல்லது] 



01 START கிளிக் செய்து



02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK   

     செய்யவும்.



03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்



04 அதில் ping websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)






அழிக்க முடியாத பைல்களை அழிக்க 



சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.



01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும் 



02. எடுத்துக்காட்டாக C  டிரைவில் mydoc என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents  and Settings \ mydoc.txt  



03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options  Menu  தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ்  ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.



04. இனி  Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents  and Settings  என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.



05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt  என டைப் செய்து  என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.

  பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க 



சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.

பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?

கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.



பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது



01. START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்



02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்   H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.



03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.



மெமரி கார்டும் பயனும்:
மெமரி கார்ட்இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் பயனர்களே இருக்க முடியாது. வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள,பாடல்களை சேமிக்க, படங்களை சேமிக்க, பேசியதை சேமித்து வைக்கஇப்படி பல வகைகளில் நமக்கு உதவுகிறது மெமரிகார்ட்.
முதலில் செல்போனில் பயன்படுதப்பட்ட மெமரிகார்ட், இப்பொழுது அனைத்து விதமான தகவல் தொடர்பு சாதனங்களிலும் பயனபடுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக டேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன், ipad, ipod, Digital Camera போன்ற கையடக்கச் சாதனங்களைச் சொல்லாம். காலத்திற்கு ஏற்ப, பயன்படுத்துவதற்கு ஏற்ப மெமரிகார்ட்களிலும் பல்வேறு வகையான கொள்ளவு, திறன், அளவு ஆகிய வகைகளில் நமக்கு கிடைக்கிறது
காலத்திற்கேற்ப இதனுடைய தன்மையிலும், வகைகளிலும் மாறுபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் microSD card என்று சொல்லப்படும் இந்த மெமரி கார்ட்களை உலகளில் பார்க்கும்போது 400க்கும் அதிகமான நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றன.
மெமரி கார்டின் வகைகள்:
எட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.
1. SDSC (Standard Capacity)
2. SDXC (The extended Capacity)
3. SDHC (The High Capacity)
4. SDIO
SD CARD என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதிகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சர்யூட் முறைகளே இதில் பயன்படுத்தபட்டுள்ளன.
SDHC கார்ட்களைவிட SD, SDXC வகை கார்ட்கள் அதிக கெப்பாசிட்டி திறன் கொண்டது.
மெமரி கார்டின் அளவுகள்:
பொதுவா SD cards மூன்று வகையான அளவுகளில் கிடைக்கின்றன. இவைகள் ஸ்டான்டர்ட் ஆகும் . அவை.
1. Standared SD (இதன் அளவு 32×24 மில்லிமீட்டர்)
2. Mini SD (இதன் அளவு 20×21.5 மில்லிமீட்டர்)
3. MicroSD (இதன் அளவு 15×11 மில்லிமீட்டர்)
எஸ்.டி கார்ட்களில் கெபாசிட்டி, மற்றும் திறன் வளர்ச்சிகளை வேறுபடுத்திக்காட்ட SD, SDHC மற்றும் SDXC என குறிப்பிடுகின்றனர்.
எஸ்டி கார்டின் வேகத்தைப் பொறுத்து, எடுக்கப்படும் வீடியோவின் தரமும் அமையும். காரணம் அதில் எழுதப்படும் டேட்டாக்கள் அதிகமாக கையகப்படுத்துவதால்தான். இதில் ஒரு நொடிக்கு முன்னூற்றி பன்னிரண்டு MB தகவல்கள் எழுதப்படும். அதே வேகத்தில் அதை படிக்கவும் முடியும். இந்த வேகத்தில் தகவல்கள் எழுத முடிவதால் தெளிவான படங்கள், வீடியோக்கள் மற்றும் டேட்டாக்களை நாம் பெற முடியும்.
அனைத்து SD கார்ட்களிலும் CPRM என்ற தொழில்நுட்பம் பயன்படுப்படுகிறது. CPRM என்பதின் விரிவு Content Protection for Rcordable Media என்பதாகும்.
SD கார்டின் சிறப்பு;
இதன் மிகச்சிறந்த பயன்பாடே, பத்தாயிரத்துக்கும் அதிகமான முறை தகவல்களை அழித்து, மீண்டும் எழுத முடியும் என்பதுதான். ஒவ்வொரு முறையில் தேவையில்லாத அல்லது பழைய டேட்டாவினை அழித்து புதிய டேட்டாவினை பதிந்துகொள்ள முடியும். இது செயல்கள் அனைத்தும் நல்ல தரமான பிராண்டட் SD கார்ட்களில் மட்டுமே செய்ய முடியும்.
பிராண்டட் SDcards ஒருசில
1.     Sasmung microSD card
2.     Sandisk Ultra microSD card
3.     Transcend microSD card
4.     Sandisk mobile ultra
5.     Toshiba microSD card
6.     Sony microSD card
இதுபோல 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் microSD Card கள் உள்ளன.
மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .
சரிதானே ?
சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
(
வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்

மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speed குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் file transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்
class 6 – 6MB per second
Class 8 – 8MB per second
Class 10 – 10MB per second
என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது